மிகப் பெரிய ஜனநாயக இந்தியாவை, கேலிக் கூத்தாக்குது மோடி கூட்டம் - கே.பாலகிருஷ்ணன் காட்டம்!
K Balakrushnan Condemn for BBC IT Raid
"ஐடி துறை, அடியாள் துறையானதா? உள்நாட்டு ஊடகங்களின் மீதான அடக்குமுறை தர்பாரில் உலக ஊடகமும் தப்பவில்லை" என்று, பிபிசி அலுவலவகத்தில் நடந்த ஐடி ரெய்டுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "குஜராத்திலும், நாடு முழுவதும் மோடி ஆட்சியின் வன்முறை தாண்டவத்தை ஆவணமாக்கியது பிபிசி. இப்போது அதன் டெல்லி அலுவலகத்தில் ஐடி ரெய்டு, ஊழியர்களுக்கு மிரட்டல்.
ஐடி துறை, அடியாள் துறையானதா? உள்நாட்டு ஊடகங்களின் மீதான அடக்குமுறை தர்பாரில் உலக ஊடகமும் தப்பவில்லை. மிகப் பெரிய ஜனநாயகம் இந்தியாவை, கேலிக் கூத்தாக்குது மோடி கூட்டம்" என்று கே பாலகிருஷ்ணன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இதேபோல் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் விடுத்துள்ள கண்டன செய்தியில், "அமலாக்கத்துறை, சி.பி.ஐ., வருமான வரித்துறை உள்ளிட்ட அமைப்புகள் அரசியல் கருவிகளாக பயன்படுத்தப்படுகின்றன.
ஆட்சி அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, இந்திய ஜனநாயகத்தையும், ஊடகச் சுதந்திரத்தையும் பாழடித்து வருபவர்களுக்கு எதிர்வரும் தேர்தல்களில் மக்கள் தக்க பாடத்தை புகட்டுவார்கள்" என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
English Summary
K Balakrushnan Condemn for BBC IT Raid