முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டே இந்த வரியை உயர்த்தினார் - அமைச்சர் கேஎன் நேரு பரபரப்பு பேட்டி.!  - Seithipunal
Seithipunal


தலைநகர் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக அமைச்சர் கே என் நேரு தெரிவிக்கையில், "தமிழகத்தை விட மற்ற மற்ற மாநிலங்களில் 50 சதவீதம் 100 சதவீதம் வரி இருந்து வருகிறது. தமிழக முதலமைச்சர் ஏழை, எளிய மக்கள் அதிகம் பாதிக்கப்படாத அளவிற்கு வரி உயர்வை திட்டமிட்டு அறிவித்துள்ளார்.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நகராட்சி தலைவர்கள் தங்களுடைய நகராட்சியின் பணத்திலேயே நகரத்தை முன்னேற்றுவதற்கான வழிவகை செய்வதற்காக இந்த வரி உயர்வு கொண்டுவரப்பட்டுள்ளது.

இதனை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதுவும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிசாமி தெரிவிக்கையில், இது திமுகவிற்கு வாக்களித்தற்காக அவர்கள் அளித்த பரிசு என்று சொல்லியிருக்கிறார்.

இந்த வரி உயர்வை 2018ஆம் ஆண்டு அவர்கள் 200 சதவீதமாக உயர்த்தி இருந்தார்கள். தேர்தல் வருகின்ற காரணத்தினால், அதனை முழுமையாக நிறுத்தி வைத்திருந்தார்கள். தேர்தல் வந்த பிறகு அதனை அவர்கள் உயர்த்துவதாக இருந்தார்கள். 

அவர்களின் முடிவுப்படி, ஏழை பணக்காரர் என்ற எந்த பாரபட்சமும் இல்லாமல் ஒரே வகையில் வரி உயர்வு செய்ய முடிவு செய்திருந்தார்கள். ஆனால், நம்முடைய முதலமைச்சர் அவர்கள் ஏழைகளுக்கு குறைவாகவும், கொஞ்சம் வசதி படைத்தவர்களுக்கு, 1,800 சதுர அடிக்கு மேல் உள்ளவர்களுக்கு வரி கொஞ்சம் கூடுதலாக உயர்த்தி இருக்கிறார்.

600 சதுர அடி குறைவாக உள்ளவர்களுக்கு நூறு ரூபாய் என்றால் 125 ரூபாய் வரி என்ற நிலைமை உள்ளது. 1200 சதுர அடி மேல் இருப்பவர்களுக்கு 50 சதவீத வரி உயர்த்தப்பட்டுள்ளது. 1800 சதுர அடிக்கு மேலாக கடைத்தெருவில் இருக்க கூடியவர்களுக்கு, முக்கிய வீதிகளில் இருப்பவர்களுக்கு 100 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மற்ற மற்ற மாநிலங்களை காட்டிலும் இது மிக மிக குறைவாக வருகிறது" என்று அமைச்சர் கே என் நேரு தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

K N NEHRU SAY ABOUT Property Tax


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->