பெரியாரை பின்பற்றினால் திருமணத்தை எளிமையாக செய்யலாம் - கி வீரமணி.!
k veramani say marriage is simple
ஈரோடு அருகே பெண் காவலர் ஒருவருக்கு பொதுக்கூட்ட மேடையில் வைத்து சுயமரியாதை திருமணம் நடந்து உள்ளது.
ஈரோடு மாவட்டம், சூரம்பட்டி பகுதியில் நீட்தேர்வு எதிர்ப்பு மற்றும் புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு மாநில உரிமை மீட்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி பங்கேற்றார். பொதுக்கூட்டத்திற்கு முன்னதாக மேடையில் வைத்து பெண் காவலர் ஒருவருக்கு சுயமரியாதைத் திருமணம் நடைபெற்றது.
கி.வீரமணி உறுதிமொழி வாசித்து மணமக்கள் ரா.நேரு - செ.பொ.அறிவுச்செல்விக்கு திருமண ஒப்பந்தம் செய்து வைத்தார். திருமணம் முடிந்த பிறகு பேசிய கி வீரமணி,
"தந்தை பெரியார் அவர்கள் திருமணத்தை மிக எளிதாக நடத்த வேண்டும் என்று கூறுவார். அதன் அடிப்படையிலேயே மிக மிக எளிமையாக இந்த திருமணம் நடந்து முடிந்துள்ளது. இந்த மணமக்களின் பெற்றோர்கள் பந்தல் அமைக்கவில்லை. யாரையும் அழைக்கவில்லை.
ஆனால் பெரியாரைப் பின்பற்றி இந்த திருமணம் நடந்த உள்ளதால், நூற்றுக்கணக்கான மக்கள் முன்னிலையில் பிரம்மாண்டமாக இந்த திருமணம் நடந்து முடிந்துள்ளது.
'வீட்டை கட்டிப்பார், திருமணம் செய்து பார்' என்பார்கள். பெரியாரை பின்பற்றினால் திருமணத்தையும் எளிமையாக செய்யலாம். வீட்டையும் எளிமையாக கட்டலாம். இதுபோன்ற திருமணங்கள் தான் பெரியாரின் கொள்கை வாழ்ந்துகொண்டிருக்கிறது" என்று கி வீரமணி பேசினர்.
English Summary
k veramani say marriage is simple