திமுகவின் முன்னாள் அமைச்சர் காலமானார்.. சோகத்தில் தமிழக அரசியல் களம்.!! - Seithipunal
Seithipunal


திமுக முன்னாள் தொழிலாளர் நலத்துறை அமைச்சரும், மரபு கவிஞருமான கா வேழவேந்தன் காலமானார்.

தமிழக அரசின் கலைமாமணி, சிறந்த எழுத்தாளர் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்ற கவிஞர் கா வேழவேந்தன் நேற்று உடல்நலக்குறைவால் சென்னை-மயிலாப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். 

கும்முடிபூண்டி அருகிலுள்ள காரணி எனும் ஊரில் பிறந்த கா வேழவேந்தன், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பட்டம் பெற்று, முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் பேச்சால் கவரப்பட்டு, திமுகவில் இணைந்தார். 

திமுக சார்பில் கும்முடிபூண்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று, தொழிலாளர் நலத் துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார். தொழிலாளர் தினமான மே 1ஆம் தேதியை விடுமுறை நாளாக அறிவிப்பு, தீர்மானத்தைக் கொண்டுவந்து, சட்டமன்றத்தில் சட்டம் ஆக்கினார். 

இந்நிலையில், உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள அவரது வீட்டில் காலமானார். இவரது மறைவிற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் தமிழ் அறிஞர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ka vezhavendan passed away


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->