நெல்லை கல்குவாரி விபத்து : சிக்கிய 3 பேரை மீட்கும் பணியை விரைவுப்படுத்தி அவர்களை காப்பற்ற வேண்டும் - கமல்ஹாசன்.! - Seithipunal
Seithipunal


நெல்லை கல்குவாரி விபத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியை விரைவுப்படுத்தி விரைவாக காப்பாற்ற வேண்டும் என்று, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார் விடுத்துள்ளார். 

நெல்லை மாவட்டம், அடைமிதிப்பான்குளம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான கல்குவாரியில் வெடி வைத்து உடைக்கப்பட்ட கற்களை இளையாா்குளம் கிராமத்தைச் சோ்ந்த செல்வம் (27), ஆயன்குளம் முருகன் (23), காக்கைக்குளம் செல்வகுமாா் (30), நாட்டாா்குளம் விஜய் (27), தச்சநல்லூா் ஊருடையான்குடியிருப்பு ராஜேந்திரன் (35), விட்டிலாபுரம் முருகன் (40) ஆகிய தொழிலாளா்கள் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் அள்ளும் பணியில் ஈடுபட்டிருந்தனா். 

கடந்த சனிக்கிழமை இரவு, திடீரென பாறைகள் சரிந்து விழுந்ததில் அனைவரும் கல் குவியலுக்குள் சிக்கிக்கொண்டனா். இதில்,  3 பேரை உயிருடன் மீட்டனா். அதில், செல்வம் என்பவா் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

மேலும், லாரி ஓட்டுநர்கள் செல்வகுமார், ராஜேந்திரன் மற்றும் லாரி கிளீனர் முருகன் ஆகிய 3 பேரை மீட்க இரண்டாவது நாளாக தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கல்குவாரி விபத்தில் சிக்கியுள்ளவர்களின் மீட்கும் பணியை விரைவுப்படுத்தி விரைவாக அவர்களை காப்பாற்ற வேண்டும் என்று, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "நெல்லை கல்குவாரி விபத்தில் ஒரு உயிரிழந்துள்ளதும், இன்னும் 3 பேர் சிக்கிக்கொண்டு இருப்பதும் வேதனை அளிக்கிறது. அரசு மீட்புப் பணியை விரைவுப்படுத்தி அவர்களை விரைவாக காப்பற்ற வேண்டும்" என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kamal say Nellai Quarry Accident


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->