#சற்றுமுன் | ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் கைது! - Seithipunal
Seithipunal


திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் வாசலில் உள்ள ஈ.வெ.ரா சிலை குறித்து பேசிய திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் மீது சைபர் க்ரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில் இன்று அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 1ஆம் தேதி மதுரவாயலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலாளரும், ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணன் பேசுகையில், "ஸ்ரீரங்க கோவில் வாசலில் உள்ள சிலையை உடைத்து அகற்றுகின்ற நாள் தான் இந்துக்களின் எழுச்சி நாளாக இருக்கும்" என்று பேசி இருந்தார்.

கடந்த 2006 ஆம் ஆண்டு ஸ்ரீரங்கத்தில் உள்ள பெரியார் சிலையை சேதப்படுத்தியதால் கலவரம் ஏற்பட்ட நிலையில் இவரின் இந்த பேச்சு சர்ச்சையை கிளப்பியது.

மேலும், சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பாக இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டது .

புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்யவே, கனல் கண்ணன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தை நாடினார். நீதிமன்றம் ஜாமீன் மறுக்கவே, கனல் கண்ணன் தலைமறைவாகினார்.

இந்நிலையில், இன்று காலை கனல் கண்ணனை போலீசார் கைது செய்துள்ளனர். 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kanal Kannan arrested


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->