தேர்தலில்  வேட்பாளராக களமிறங்கும் பிரபல நடிகை - பாஜகவின் தலைமை முடிவு என்ன?!  - Seithipunal
Seithipunal


பாலிவுட்டின் சர்ச்சை நாயகி, தன்னுடைய கருத்தை ஆணித்தரமாக சொல்லும் நடிகை கங்கணா ரனாவத் (வயது 35) வரும் மக்களவை தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்திருந்தார்.

இதனிடையே, இமாசல பிரதேச மாநிலத்தை சேர்ந்த நடிகை கங்கணா ரனாவத், அடுத்த மாதம் 12-ந்தேதி அம்மாநிலத்தில் நடக்கும் சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார்.

மேலும், பாஜகவும், மக்களும் விரும்பினால், இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் போட்டியிடத் தயார் எனவும் நடிகை கங்கணா தனது விருப்பத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

நடிகை கங்கனாவின் கருத்து குறித்து பாஜகவின் தேசிய தலைவர் ஜேபி நட்டாவிடம் செய்தியாளர்கள் எழுப்பினார். அதற்க்கு அவர், "பாஜகவில் இணைந்து பணியாற்ற அனைவருக்கும் இடம் உண்டு. அந்த வகையில் நடிகை கங்கணா ரனாவத் பாஜகவில் சேருவது வரவேற்கத்தக்கது. 

அதே சமயத்தில், தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்குவது என்பது, என்னுடைய தனிப்பட்ட முடிவு இல்லை. இது குறித்து அடிமட்ட தொண்டர்கள், தேர்தல் கமிட்டி, நாடாளுமன்ற குழு என கலந்து ஆலோசனை செய்து முடிவு எடுக்க வேண்டிய விவகாரம்" என்றார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kangana Ranaut JP Nadda BJP


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->