பிரபல நடிகையின் தொகுதியை வேட்டையாட வரும்  ரணாவத்.?! நடிகை பேட்டி.! - Seithipunal
Seithipunal


உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மதுரா தொகுதியின் எம்பி யாக ஹேமமாலினி இருக்கிறார். இந்த தொகுதியில் அவர் 2014ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் மற்றும் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் என இரு முறை போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.

சமீபத்தில் பிருந்தாவன் பகுதியில் இருக்கும் ஒரு கோவிலில் நடிகை கங்கணா ரணாவத் சாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். அப்பொழுது அவரைப் பார்ப்பதற்காக மக்கள் கூட்டம் பெருக்கெடுத்தது. ஆனால், அவர் அரசியல் குறித்து எந்த கேள்விகளுக்கும் பதில் கூறவில்லை. 

அரசியலில் கால் பதிக்கின்ற எண்ணம் இருப்பதாக மட்டும் அவர் பேட்டி அளித்தார். இத்தகைய சூழலில் ஹேமமாலினியின் மதுரா தொகுதியில் நடிகை வரும் தேர்தலில் போட்டியிட இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து செய்தியாளர்கள் எம்பி ஹேமமாலினிடம் கேள்வி எழுப்பினர்.

அப்போது அவர், " மதுரா தொகுதியில் திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் தான் எப்பொழுதும் வெற்றி பெறுவார்கள். வேறு யாராவது போட்டியிட்டால் அவர்களை நீங்கள் வெற்றி பெற வைக்க மாட்டீர்கள். எதிர்காலத்தில் ராக்கி சாவந்த் கூட இங்கே போட்டியிட்டு எம்.பியாக வர வாய்ப்புகள் இருக்கிறது. இது எல்லாம் இறைவன் செயல்." என்று கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kangana Ranaut may Participate election on Madura


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->