திரையரங்க வளாகத்தில் யூடியூப் சேனல்களுக்கு தடை! விமர்சித்தால் ரசிகர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை -  பாரதிராஜா தலைமையிலான தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை! - Seithipunal
Seithipunal


திரையரங்க வாயில்களில் நின்று திரைப்படம் எவ்வாறு உள்ளது என ரசிகர்களிடம் கருத்து கேட்க தடை விதிக்க வேண்டும் என்று, பாரதிராஜா தலைமையிலான தயாரிப்பாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்த அந்த அறிக்கையில், திரையரங்க வாயில்களில் நின்று திரைப்படம் எவ்வாறு உள்ளது என ரசிகர்களிடம் கருத்து கேட்பதற்கு தடை விதிக்க வேண்டும்.

திரைப்படம் எப்படி இருக்கிறது என்று கூறுவதாக நினைத்து தனிப்பட்ட வன்மத்தை கக்குகின்றனர். அண்மையில் கங்குவா திரைப்பட விமர்சனம் என்ற பெயரில் பெரியவர் ஒருவர் வன்மத்தை கக்கினார்.

திரையரங்க வாயில்களில் யூடியூப் சேனல்கள் ரசிகர்களிடம் பேட்டி எடுப்பதற்கு தடை விதிக்க வேண்டும். தனிப்பட்ட வன்மத்தில் திரைப்படங்களை விமர்சிக்கும் விமர்சகர்கள், ரசிகர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்று பாரதிராஜாவை தலைவராக கொண்டுள்ள நடப்பு தயாரிப்பாளர் சங்கம் சார்பில் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kanguva indian2 Vettaiyan issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->