தூத்துக்குடியில் கனிமொழி தொடர்ந்து முன்னிலை..!! - Seithipunal
Seithipunal



நாடு முழுவதும் 543 மக்களவை தொகுதிகள் உள்ளன. இதில் 542 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டு வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் மொத்தம் 39 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. 

இந்த 39 தொகுதிகளில் 36வது தொகுதியாக உள்ளது தூத்துக்குடி தொகுதி. 6 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்டுள்ள தூத்துக்குடி தொகுதியில் மொத்தம் 14 லட்சத்து 48 ஆயிரத்து 159 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண் வாக்காளர்கள் 7 லட்சத்து 8 ஆயிரத்து 234 பேரும், பெண் வாக்காளர்கள் 7 லட்சத்து 39 ஆயிரத்து 710 பேரும், மூன்றாம் பாலின வாக்காளர்கள் 215 பேரும் உள்ளனர்.

இந்நிலையில், 2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பாக கனிமொழி போட்டியிட்டுள்ளார். மேலும் அதிமுக சார்பில் சிவசாமி வேலுமணியும், பாஜக சார்பில் தா மா க வை சேர்ந்த எஸ். டி. ஆர். விஜயசீலன் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் ரொவீனா ரூத் ஜேன் ஆகியோர் போட்டியிட்டுள்ளனர்.

இங்கு ஏப்ரல் 19ம் தேதி நடைபெற்ற தேர்தலில் 66.88 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. முன்னதாக நடைபெற்ற மூன்று மக்களவைத் தேர்தல்களில் ஒரு முறை அதிமுக வும், இரண்டு முறை திமுகவும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் இன்று நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில் திமுகவின் கனிமொழி தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kanimozhi Remains Lead in Thoothukudi


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->