#BREAKING || நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் - காஞ்சியின் 36 வார்டில் தேர்தல் ஒத்திவைப்பு.! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர் ஜானகிராமன். 37 வயதாகும் இவர், அந்த பகுதியில் அதிமுகவின் தீவிர ஆதரவாளராகவும், அதிமுக பிரமுகரும் இருந்து வருகிறார்.

வருகின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், காஞ்சிபுரம் மாநகராட்சி 36-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு, அதிமுக வேட்பாளராக களமிறங்கி, தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில், இன்று அதிகாலை திடீரென ஜானகிராமன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

இதுகுறித்து தகவல் அறிந்த காஞ்சிபுரம் போலீசார், அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அதிமுக வேட்பாளர் தற்கொலை குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், அதிமுக வேட்பாளர் ஜானகிராமன் உயிரிழந்தது காரணமாக, காஞ்சிபுரம் 36 வது வார்டு நகர்ப்புற தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக, காஞ்சிபுரம் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அலுவலர் தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் முதல் தேர்தல் ஒத்திவைப்பு அறிவிப்பு இதுவாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

KANJPURAM 36 WARD ELECTION Postpone


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->