கர்நாடக முதலமைச்சர் 3 மாதத்தில் சிறை?...சித்தராமையா மீது லோக் ஆயுக்தா வழக்கு! - Seithipunal
Seithipunal


கடந்த 2021ம் ஆண்டு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு 14 வீட்டுமனைகள் ஒதுக்கப்பட்ட விவகாரத்தில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி, முதலமைச்சர்  சித்தராமையா மீது வழக்கு தொடர கவர்னர் அனுமதி வழங்கினார். அதன்படி இது குறித்து தாக்கல் செய்த மனுக்கள் மீது பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே தன் மீது வழக்கு தொடர கவா்னா் வழங்கிய அனுமதி உத்தரவை ரத்து செய்யுமாறு கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில்  சித்தராமையா மனு தாக்கல் செய்திருந்தார்.

இதற்கிடையே மனு மீதான தீர்ப்பினை கடந்த 24-ம் தேதி கர்நாடக உயர் நீதிமன்றம்  வழங்கியது. அதில், சித்தராமையாவை விசாரிக்க தடை இல்லை என்று குறிப்பிட்ட நீதிமன்றம்,  சித்தராமையா மீது வழக்கு தொடர கவா்னா் வழங்கிய அனுமதி உத்தரவை ரத்து செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தவிட்டது.
இது கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்ந்து முடா ஊழல் தொடர்பாக முதல்வர் சித்தராமையா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்றும், இந்த  புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்து 3 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று லோக் ஆயுக்தாவிற்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

இந்த நிலையில், பழைய சி.ஆர்.பி.சி. சட்டப்பிரிவில் மைசூர் லோக் ஆயுக்தாவில் சித்தராமையா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka chief minister in jail for 3 months lok ayukta case against siddaramaiah


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->