ஹிஜாப் விவகாரம் : கைது செய்யப்பட்டவர்கள் யார்? அமைச்சர் பரபரப்பு பேட்டி.!
karnataka hijab issue
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் 6 மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்ததற்கு பள்ளி அனுமதிக்கவில்லை. இது தொடர்பான வழக்கு விசாரணை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடந்து கொண்டு இருக்கிறது.
இந்நிலையில், நேற்று கர்நாடகாவின் தாவண்கரே மாவட்டத்தில், ஹிஜாப் மாநில அணிவது தொடர்பாக நடைபெற்ற போராட்டம், கலவரமாக மாறக்கூடிய நிலைக்கு சென்றதால், போராட்டக்காரர்களை களைந்து செல்வதற்காக வானத்தை நோக்கி போலீசார் துப்பாக்கி சூடு செய்தனர்.
இதேபோல் பல மாவட்டங்களிலும் போராட்டம் வெடித்தது. குறிப்பாக பள்ளி கல்லூரிகளின் முன்பு போராட்டகாரர்கள் தொடர்ந்து போராட்டம் செய்து வந்தனர். இதனையடுத்து, கர்நாடகாவில் இன்று முதல் 3 நாட்களுக்கு மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்தது.
இந்நிலையில், கர்நாடகாவில் விரும்பத்தகாத நிகழ்வுகள் என்ன நடந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, அம்மாநில அமைச்சர் அரக ஞானேந்திராகர் தெரிவித்துள்ளார்.
மேலும், கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் சம்பவம் தொடர்பாக இதுவரை கைது செய்யப்பட்ட அனைவருமே வெளியாட்கள் என்றும், மாணவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.