கர்நாடக ஹிஜாப் விவகாரம் : உச்சநீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


கர்நாடகா மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் ஆடைகளை அணிவதற்கு மாநில அரசு தடை விதித்தது. உப்பினங்கடி கல்லூரியில் தடையை மீறி ஹிஜாப் அணிந்து வந்த 24 மாணவிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில், உடுப்பியில் உள்ள மகளிர் கல்லூரியைச் சேர்ந்த முஸ்லிம் மாணவிகள் வகுப்பறைக்குள் ஹிஜாப் அணிய அனுமதி கோரி, உயர்நீதிமன்றம் மனு தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த உயர்நீதிமன்றம் இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

ஹிஜாப் அணிவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுத்த கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. 

அப்போது, இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், பதில் அளிக்கக் கோரி கர்நாடகா அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். மேலும், விசாரணையை வருகின்ற செப்டம்பர் 5-ஆம் தேதி ஒத்தி வைத்து உத்தரவு பிறப்பித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

karnataka hijab issue sc order to karnataka govt


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->