ஹிஜாப், காவி தடை: உச்சநீதிமன்றம் ஓடிய இஸ்லாம் மாணவர்கள்.! - Seithipunal
Seithipunal


ஹிஜாப், காவி விவகாரத்தில் கர்நாடக உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் இஸ்லாமிய மாணவிகள் மேல்முறையீடு செய்துள்ளனர்.

ஹிஜாப் ஆடை குறித்த வழக்கில் தீர்ப்பு வரும் வரை, பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்கள் மதம் சம்பந்தப்பட்ட மத அடையாளங்களை குறிக்கும் ஆடைகளை அணிந்து வரக்கூடாது என்று, கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், மூடப்பட்ட பள்ளிகளையும், கல்லூரிகளையும் திறக்க மாநில அரசுக்கு உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், இந்த வழக்கு விசாரணையை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

இந்நிலையில், உயர்நீதிமன்றத்தின் கூடுதல் அமர்வு பிறப்பித்த இந்த உத்தரவை எதிர்த்து  இஸ்லாமிய மாணவர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

அதில், இஸ்லாமியர்களின் அடிப்படை உரிமைகளை மறுக்கும் வகையில் உயர் நீதிமன்றத்தில் உத்தரவு அமைந்திருப்பதாகவும், எனவே விவகாரத்தில் அமைக்கப்பட்ட விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

முன்னதாக நேற்று இது சம்மந்தமான வழக்கை அவசர வழக்காக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தபோது, அதனை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது, இப்போது இந்த வழக்கை விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

KARNATAKA HIJAB ISSUE SUPREME COURT


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->