மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு கூடாது - அமித் ஷா விளக்கம்! - Seithipunal
Seithipunal


கல்வி, வேலைவாய்ப்பில் இஸ்லாமியர்களின் 4% இடஒதுக்கீட்டை ரத்து செய்யும் கர்நாடக அரசின் முடிவை அமல்படுத்த இடைக்கால தடைவிதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

கடந்த மாா்ச் 24ம் தேதி இஸ்லாமியர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த 4 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்து, கர்நாடக மாநில அரசு ஆணை பிறப்பித்தது.

மேலும், இந்த 4% இடஒதுக்கீடு ஒக்கலிகா, லிங்காயத் சமூகத்தினருக்கு கூடுதல் இடஒதுக்கீடாக பிரித்து வழங்கப்படும் என்றும், பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான பிரிவில் இஸ்லாமியர்கள் இடஒதுக்கீடு பெறலாம் என்றும் கர்நாடக மாநில அரசு அறிவித்தது.

இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், மே 9ம் தேதி வரை இஸ்லாமியர்களின் 4% இடஒதுக்கீட்டை ரத்து செய்யும் கர்நாடக அரசின் முடிவை அமல்படுத்த கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வரும் மே 10ம் தேதி கர்நாடகாவில் சட்டமன்ற பொது தேர்தல் நடைபெற் உள்ள நிலையில், இந்த உத்தரவு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இதற்கிடையே, கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளும் மத்திய அமைச்சர் அமித் ஷா, "மதத்தின் அடியில் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது என்பதை நாங்கள் நம்புகிறோம்" என்று, இஸ்லாமியர்களுக்கான நாலு சதவீத இட ஒதுக்கீட்டை கர்நாடக அரசு ரத்து செய்தது குறித்து விளக்கமளித்துள்ளார்.

மேலும், உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவிக்கையில், ஒருவேளை கர்நாடகாவில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஊழல் அதிகரித்து, கலவரம் நடக்கும்" என்றும் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

முன்னதாக கர்நாடக மாநிலம், ஷிவமோகவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, பாஜக மூத்த தலைவர் ஈஸ்வரப்பா, இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த ஒருவரின் வாக்கு கூட எங்களுக்கு தேவையே இல்லை என்று தெரிவித்தார். அவரின் இந்த பேச்சு தற்போது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka Reservation SupremeCourt amit shah explain


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->