உயர் நீதிமன்ற மதுரை கிளை கலைஞர் போட்ட பிச்சை.! - திமுக அமைச்சரின் சர்ச்சை பேச்சு.!! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி, அமைச்சர்கள் ஏ.வ வேலு, பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஏ.வ வேலு "தென்னகத்தில் இருக்கும் அத்தனை மாவட்டங்களும் உயர் நீதிமன்றத்திற்கு வர வேண்டும் என்றால் சென்னைக்கு தான் வரவேண்டும். அவ்வாறு வந்து வழக்கறிஞர்களை சந்தித்து வழக்கு நடத்த வேண்டும் என்றால் 3 முதல் 4 நாட்கள் ஆகும். 

தென் மாவட்டங்களில் இருந்து 2 நாட்கள் ரயிலில் பயணம் செய்து சென்னையில் இருக்கும் வழக்கறிஞரை சந்தித்து வழக்கை நடத்த வேண்டும் என்றால் வசதி படைத்தவர்களால் மட்டுமே முடியும். இந்த சூழலில் மத்திய அரசோடு தனது எண்ணத்தை எடுத்துக் கூறி, பலமுறை நாடாளுமன்றத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களை பேச வைத்து தென் மாவட்டங்களில் இருப்பவர்கள் தங்களது பொருளாதாரத்தை செலவு செய்யாமல், பொருளாதாரத்தை விரயம் செய்யாமல் இருக்க இன்று மதுரைக்கு உயர் நீதிமன்றத்தின் கிளை வந்தது என்று சொன்னால் தலைவர் கலைஞர் என்கிற பெருமாள் போட்ட பிச்சை தான் என்று சொன்னால் அது மிகையாகாது" என பேசியுள்ளார். அமைச்சர் ஏ.வ வேலுவின் இந்த பேச்சு சர்ச்சையை கிளப்பியுள்ளது. தென்மாவட்ட மக்களை இழிவுபடுத்தும் வகையில் அமைச்சர் ஏ.வ வேலு பேசியுள்ளதாக சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Karunanidhi gave maduraiHC to Southern people as begg


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->