கருணாநிதியின் பேனா நினைவு சின்னத்திற்கு ஆப்பு? உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பரபரப்பு மனு! - Seithipunal
Seithipunal


சென்னை : மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பேனாவை போன்று கடலில் நினைவு சின்னம் அமைப்பதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னை மெரினா கடற்கரையில் கருணாநிதியின் நினைவிடம் அமைந்துள்ளது. அதன் அருகில் கடலுக்கு உள்ளே (கரையிலிருந்து சுமார் 300 மீட்டர்) பேனா நினைவுச்சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது.

இதற்க்கு பொது மக்கள் மத்தியிலும், மீனவர்கள் மத்தியிலும், திமுகவின் சில கூட்டணி கட்சிகளும், எதிர்கட்சினர் தரப்பிலும், சுற்றுசூழல் ஆர்வலர்களும் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். சொல்லப்போனால், கடலில் பேனா நினைவு சின்னம் அமைக்க திமுகவினர் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அண்மையில் நடந்த கருது கேட்பு கூட்டத்தில் கூட பெரும்பாலானோர் கடுமையான எதிர்ப்பையே பதிவு செய்தனர். கருத்து தெரிவிக்க விடாமல் திமுகவினர் பல இடையூறுகள் செய்த காணொளிகள் தற்போதுவரை இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், திமுகவினர் காசு கொடுத்து சிலரை கூப்பிட்டு வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், கடலில் பேனா சின்னம் வைப்பதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில்  சென்னையை சேர்ந்த தங்கம் என்பவரும்,  ராமநாதபுரத்தை சேர்ந்த நல்லதம்பி என்பவரும் மனு தாக்கல் செய்துள்ளனர். 

அவர்களின் அந்த மனுவில், "மீனவர்களின் கருத்தை கேட்காமல் இந்த சின்னத்தை அமைக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இயற்கை நீதிக்கு எதிராக கடலில் 134 அடி உயரம் கொண்ட  நினைவு சின்னம் அமைக்க திட்டமிட்டுள்ளார்கள்.

மீனவர்களின் வாழ்வாதாரம், கடல் வளம் பாதிக்கும் என்றும் அறிந்தும் கூட இதற்கு தமிழக பொதுப்பணித்துறை அனுமதி வழங்கியுள்ளது. எனவே இந்த நினைவுச் சின்னத்தை வேறு இடத்தில் அமைக்க உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karunanithi Pen statue issue SC Case


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->