கரூரில் சுற்றிவளைக்கப்பட்ட சீமான்! ஓடிவந்த மக்கள்! அடுத்தடுத்து நடந்த சம்பவங்களால் பரபரப்பு!
Karur vennmalai people issue NTK Seeman
கரூர் வெண்ணைய்மலை பகுதியில் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வருகின்ற பூர்வகுடி மக்களின் குடியிருப்புகளை ஆக்கிரமிப்பு என்று கூறி தமிழக அரசு அகற்றி வருகிறது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, கோரிக்கைகளை கேட்டறிய செல்லவிருந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை வெண்ணெய்மலை செல்ல முடியாத வகையில் சுற்றி காவலர்கள் குவிக்கப்பட்டு தடுத்து இருந்தனர்.
அனைத்து சாலைகளும் தடுப்பு வைத்து வாகனங்கள் உள்ளே வெளியே செல்ல முடியாதவாறு தடுக்கப்பட்டு இருந்தது.
ஆனால், இந்த தடுப்பக்களை மீறி பாதிக்கப்பட்ட மக்கள் சீமானை சந்தித்து, குறைகளை முறையிட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட வெண்ணைமலை மக்களை சந்தித்த சீமான் பேசியதாவது, "அறநிலையத்துறையின் இடமாகவே இருந்தாலும் மக்களின் வாழ்விடத்தை அப்புறப்படுத்துவது தவறு.
மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து, அவர்களின் வாழ்விடத்தை காக்க வேண்டும். இதுகுறித்த வழக்குகளை சந்திக்க நாங்கள் தயார்" என்று சீமான் தெரிவித்தார்.
English Summary
Karur vennmalai people issue NTK Seeman