ராகுல் காந்தி ஒரு காகித புலி!! ரவுண்டு கட்டிய கே.சி.ஆர் மகள்!! - Seithipunal
Seithipunal


தெலுங்கானாவில் வரும் டிசம்பர் 3ம் தேதி சட்டமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆளும் பாரதிய ராஷ்ட்ரிய சமேதி மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே நேரடி போட்டி நிலவில் வருகிறது. தற்போது தெலுங்கானா மாநிலத்தில் முகாமிட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், வயநாடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்த ராகுல் காந்தி தெலுங்கானா சட்டமன்றத் தேர்தலில் கே.சி.ஆர் நிச்சயம் தோல்வியை தழுவார் என நான் நினைக்கிறேன். இந்த தேர்தல் தெலுங்கானாவின் நில பிரபுகளுக்கும், தெலுங்கானா மக்களுக்கும் இடையே தான் போட்டி நடக்கிறது.

இந்த பத்தாண்டு கால ஆட்சியில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் தொடர்ந்து மக்களிடமிருந்து விலகியே இருக்கிறார். மாநிலத்தில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடைபெற்றுள்ளது. அனைத்து அதிகாரத்திலும் ஒரு குடும்பத்தினரும் மட்டுமே உள்ளனர் என கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். 

இந்த விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்துள்ள சந்திரசேகர ராவின் மகள் கவிதா ராகுல் காந்தி சிங்கம் அல்ல, அவர் ஒரு காகிதபுலி. அவர் எதை எழுதிக் கொடுத்தாலும் அதை அப்படியே படித்து விடுவார். உள்ளூர் சூழ்நிலை குறித்து அவருக்கு புரியாது.

தெலுங்கானாவில் அரசியல் விழிப்புணர்வு அதிகம் உள்ளது. உள்ளூர் மரபுகள் மற்றும் கலாச்சாரம் குறித்து ராகுல் காந்திக்கு எதுவும் தெரியாது. எங்கள் மாநிலத்தின் வளர்ச்சிக்கு நிறைய போராடி இருக்கிறோம். அடுத்த முறை இங்கே வந்தால் தோசை கடைக்குச் சென்று தோசை சாப்பிடாமல் மக்களை சந்தியுங்கள். அப்போதுதான் மக்களின் வலி புரியும்" என ராகுல் காந்திக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kcr daughter Kavitha criticized RahulGandhi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->