அரசியலுக்கு வருகிறாரா கீர்த்தி சுரேஷ்? அரசியல் நிகழ்ச்சியில் பங்கேற்பு.!!
Keerthi Suresh participate in Congress MLA function
காங்கிரஸ் எம்எல்ஏ ஏற்பாடு செய்த நிகழ்ச்சிகள் முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ் கலந்து கொண்டிருப்பதால் அவர் அரசியலுக்கு வருகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழி திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வளம் வரும் கீர்த்தி சுரேஷ் அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் முதன்முறையாக பங்கேற்றுள்ளார்.
இந்த விவகாரம் சினிமா துறையிலும் அரசியல் வட்டாரத்திலும் பேசும் பொருளாக மாறி உள்ளது. கேரள காங்கிரஸ் எம்எல்ஏ அன்வர் சதாத் மாணவர்களின் கல்விக்கு உதவும் அலைவ் அமைப்பை நடத்தி வருகிறார்.
இந்நலை காங்கிரஸ் எம்எல்ஏ அன்வர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கீர்த்தி சுரேஷ் காங்கிரஸ் பிரமுகர்களுடன் மேடையில் அமர்ந்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டனர். நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் சார்பில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கீர்த்தி சுரேஷ் கலந்து கொண்டது பரபரப்பாக பேசப்படுகிறது.
English Summary
Keerthi Suresh participate in Congress MLA function