இஸ்லாமிய கட்சி பிரமுகர், பாஜக வழக்கறிஞர் வெட்டி படுகொலை.! 144 தடை உத்தரவு பிறப்பிப்பு.!  - Seithipunal
Seithipunal


கேரள மாநிலத்தில் இரண்டு அரசியல் கட்சிகளை சேர்ந்த, இரண்டு பேர் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலத்தில் கடந்த 12 மணி நேரத்திற்குள்ளாகவே இரண்டு அரசியல் படுகொலைகள் அரங்கேறியுள்ளது. இஸ்லாமிய கட்சியான எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த பிரமுகர் ஒருவரும், பாஜக கட்சியை சேர்ந்த மாநில நிர்வாகி ஒருவரும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 

எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயலாளராக இருப்பவர் கே.எஸ். ஷான். இவர் நேற்று இரவு மன்னஞ்சேரி பகுதியில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, மர்ம கும்பல் ஒன்று வரிமாறித்து சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்தது.

இந்த படுகொலைக்கு ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக தான் காரணம் என்று எஸ்டிபிஐ கட்சியினர் குற்றம் சாட்டினர்.

இந்த நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் ஓபிசி பிரிவில் மாநில செயலாளரும், வழக்கறிஞருமான ரஞ்சித் சீனிவாசன் இன்று காலை அவரது வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். ரஞ்சித் சீனிவாசன் படுகொலைக்கு எஸ்டிபிஐ கட்சியினர் தான் காரணம் என்று பாஜக தரப்பில் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், 12 மணி நேரத்தில் இரண்டு அரசியல் படுகொலைகள் நடந்து உள்ளதால், ஆலப்புழா மாவட்டத்தில் பதட்டமான சூழ்நிலை நிலவி வந்தது, இதனை அடுத்து அம்மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kerala alapula 144


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->