அட்ராசக்க! தமிழ்நாடு அரசுக்கு கேரள அரசு ஆதரவு தருகிறதாம்...!!!
Kerala government is supporting the Tamil Nadu government
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 22-ந்தேதி பாராளுமன்ற தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தென்மாநில கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் நடத்தவுள்ளார்.இதில் பங்கேற்க ஏற்கனவே கர்நாடகா, தெலுங்கானா முதல்-மந்திரிகள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிலைபாட்டுக்குக் கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயனும் தற்போது ஆதரவு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. ஆகியோர் அடங்கிய குழு நேற்று கேரளா முதல்-மந்திரி பினராயி விஜயனை அவரது அலுவலகத்தில் சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அழைப்பு கடிதத்தை வழங்கினார்கள்.
அதைப் பெற்றுக் கொண்ட பினராயி விஜயன் மத்திய அரசின் ஒருதலைபட்சமான தொகுதி மறுசீரமைப்பு முயற்சிக்கு எதிராகச் சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தும் கூட்டத்துக்கு முழு ஆதரவு தெரிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எனவே கேரள மாநிலத்தில் இருந்தும் 22-ந்தேதி கூட்டத்தில் பங்கேற்பது உறுதியாகி உள்ளது.மேலும் இந்தக்கூட்டத்துக்கான முழு முனைப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது இறங்கியுள்ளார்.
English Summary
Kerala government is supporting the Tamil Nadu government