ஸ்டாலின் குறித்த விமர்சனம் - கிஷோர் கே சாமியின் முன்ஜாமின் மனு தள்ளுபடி! - Seithipunal
Seithipunal


தமிழக முதல்வர் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்ட பிரபல arasiyal  விமர்சகர் கிஷோர் கே சாமியின் முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 

சென்னை மற்றும் தமிழகத்தில் கனமழை வெள்ள பாதிப்பின்போது, தமிழக முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்ட பணிகளை விமர்சிக்கும் வகையில், பாஜக ஆதரவாளரும், பிரபல அரசியல் விமர்சகருமான கிஷோர் கே சாமி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

இவரின் பதிவு திமுக உடன்பிறப்புகளின் மனதை புண்படுத்தும் வகையில் அமைந்ததால், இது குறித்து சென்னை சைபர் கிரைம் பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த  சைபர் கிரைம் பிரிவு போலீசார், கிஷோரை விசாரணைக்கு ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்பினர். 

ஆனால், விசாரணைக்கு ஆஜராகாத கிஷோர் கே சாமி, முன்ஜாமின் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அதனை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kishor K Swamy Bail Judgment 18112022


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->