கிஷோர் கே சாமி மீது போடப்பட்ட குண்டர் சட்டம் ரத்து -சென்னை உயர்நீதிமன்றம்.! - Seithipunal
Seithipunal


சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருந்து வந்த அரசியல் விமர்சகரும், பத்திரிகையாளருமான கிஷோர் கே சாமி மீது போடப்பட்ட குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் முக ஸ்டாலின், மறைந்த முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி உள்ளிட்ட திமுக தலைவர்கள் குறித்து, அவதூறு பரப்பும் வகையில் கருத்து பதிவிட்டதாக கிஷோர் கே.சாமி மீது காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் ரவிசந்திரன் காவல்துறையினரிடம் புகார் அளித்தார். 

திமுகசார்பில் அளித்த புகாரினை அடுத்து கிஷோர் கே.சாமி மீது 153- கலகத்தை விளைவிக்கும் உட்கருத்தோடு செயல்படுதல்,  505(1)( b)- அரசுக்கு எதிராக அல்லது பொது அமைதிக்கு எதிராக ஒரு குற்றத்தை செய்ய தூண்டுதல், 505( 1) (c) - ஒவ்வொரு வகுப்பு அல்லது சமூகத்தை வேறு சமூகத்துக்கு எதிராக குற்றம் செய்ய தூண்டுதல் என 3 பிரிவுகளின் கீழ் சங்கர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 

மேலும், கிஷோர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது. தற்போது சிறையில் கிஷோர் கே சாமி, தன்மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில், இந்த வழக்கை இன்று விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம், "கிஷோர் கே சாமியை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவு ரத்து செய்து" உத்தரவு பிறப்பித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

KISHOR K SWAMY Gundas Cancel


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->