திமுக அமைச்சருக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு!! மாவட்ட நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!! - Seithipunal
Seithipunal


கடந்த 2006 முதல் 2011ம் ஆண்டு வரை நடைபெற்ற திமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்த போது கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், மனைவி ஆதிலட்சுமி மற்றும் உதவியாளர் சண்முக மூர்த்தி ஆகியோர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக கடந்த 2012-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்கில் இருந்து விடுவிக்க கோரி ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு மாவட்ட முதன்மை நீதிபதி திலகம் அமர்வின் முன்பு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் சொத்து குறிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், அவருடைய மனைவி ஆதிலட்சுமி மற்றும் உதவியாளர் சண்முக மூர்த்தி ஆகியோர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லாததால் விடுவிப்பதாக மாவட்ட முதன்மை நீதிபதி திலகம் தீர்ப்பு வழங்கியுள்ளார். இதன் மூலம் அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் உள்ளிட்ட 3 பேர் சொத்துக்கு குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

KKSSR acquitted from the asset accumulation case


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->