ஆதரவை வாபஸ் பெற்ற "சாதி" சங்கம்.. அதிர்ச்சியில் அண்ணாமலை.. குஷியில் அதிமுக.!! - Seithipunal
Seithipunal


நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்களை உள்ள நிலையில் கோவையில் அதிமுக சார்பில் நாயுடு சமூகத்தைச் சேர்ந்த சிங்கை ராமச்சந்திரனும், பாஜக சார்பில் கொங்கும் வேளாள கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்த அண்ணாமலையும் போட்டியிடுகின்றனர். 

கடந்த மாதம் கோவை கம்மவர் நாயுடு அமைப்பை சேர்ந்த கோபால் என்பவர் எதிர்வரும் மக்களவை பொதுத் தேர்தலில் கோவை தொகுதியில் கம்மவார் அமைப்பினர் பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு ஆதரவு அளிப்பதாக அறிக்கை வெளியிட்டிருந்தார். 

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கோவை கம்மவர் நாயுடு அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அளிக்கப்பட்ட ஆதரவை கோவை கம்மவார் நாயுடு அமைப்பு வாபஸ் பெறுகிறது என அறிவித்துள்ளனர். 

மேலும் ஒரு தனி நபரால் எந்தவித விவாதமும் இல்லாமல் இந்த ஆதரவானது அறிவிக்கப்பட்டுள்ளது எனவும், கம்மவார் நாயுடு அமைப்பின் விதிகளின்படி நாயுடு சமுதாயத்தை சேர்ந்த வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டாலோ அல்லது தெலுங்கு சாதிகளை சேர்ந்த வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டாலோ முன்னுரிமை வழங்கப்பட்டு ஆதரவு அளிக்கப்படும். 

ஆனால் அந்த விதிகளை கூட தெரியாத ஒரு நபரால் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு வழங்கப்பட்டுள்ளது. அவர் கம்மவர் நாயுடு சங்கத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் மக்களவைப் பொதுத் தேர்தலில் எங்கள் ஆதரவு அதிமுக சார்பில் களமிறங்கும் சிங்கை ஜி ராமச்சந்திரனுக்கு தான் என கோவை கம்மவார் நாயுடு அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் ஒருமனதாக தீர்மானித்து செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக பின்னடைவு ஏற்பட்டுள்ளதால் பாஜக வேட்பாளர் அண்ணாமலை அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kovai kammavar naidu take back support to Annamalai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->