லாலு பிரசாத் யாதவ், தேஜஸ்வி யாதவ் கைது?...டெல்லி நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Lalu Prasad Yadav Tejashwi Yadav arrested Delhi court orders action
உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சரும், ராஷ்டிரீய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ், 2004-2009 காலகட்டத்தில் ரெயில்வேயில் பல்வேறு மண்டலங்களில் 'குரூப் டி' பணிகளில் பலரை நியமனம் செய்தார்.
இதில் நியமனம் பெற்றவர்கள், அவர்களது நிலங்களை லாலு பிரசாத் குடும்பத்தினருக்கு மாற்றம் செய்து அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் இந்த பண மோசடி வழக்கை சி.பி.ஐ., அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.
கடந்த சில மாதங்களாக லாலு பிரசாத் யாதவின் மனைவி ராப்ரி தேவி, அவர்களது மகனும், பீகார் துணை முதலமைச்சருமான தேஜஸ்வி யாதவ், மகள்கள் மிசா பாரதி எம்.பி., சந்தா, ராகிணி ஆகியோரின் வாக்குமூலங்களை அமலாக்கத்துறை பதிவு செய்துள்ளது.
இந்த விவகாரத்தில் லாலு பிரசாத் யாதவ் குடும்பத்தின் நெருங்கிய நண்பரான அமித் கத்யாலை கடந்த ஆண்டு அமலாக்கத்துறை கைது செய்தது. மேலும் இந்த வழக்கு விசாரணை டெல்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை இன்று மீண்டும் டெல்லி நீதிமன்ற சிறப்பு நீதிபதி விஷால் கோக்னே முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, லாலு பிரசாத் யாதவ், தேஜஸ்வி யாதவ் உள்பட குற்றம் சாட்டப்பட்டவர்கள் வரும் 7ம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளார்.
English Summary
Lalu Prasad Yadav Tejashwi Yadav arrested Delhi court orders action