கடந்த 5 ஆண்டுகளில் நோட்டாவுக்கு எத்தனை கோடி வாக்குகள் பதிவாகியுள்ளது தெரியுமா?  - Seithipunal
Seithipunal


தேர்தல்களின் போது எந்த ஒரு வேட்பாளர்களுக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள், தங்கள் எதிர்ப்பை பதிவுசெய்யும் வகையில், நோட்டா என்ற முறை 2013 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. 

இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளில் நடந்துள்ள மாநில சட்டசபை தேர்தல்கள் மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் நோட்டாவுக்கு பதிவான ஓட்டுகள் குறித்து ஜனநாயக சீர்திருத்தத்துக்கான சங்கம் ஆய்வு மேற்கொண்டுள்ளது. அதில், கடந்த 5 ஆண்டுகளில் நோட்டாவுக்கு மொத்தம் 1,29,00000 லட்சம் ஓட்டுகள் பதிவாகியுள்ளது.

மாநில சட்டசபை தேர்தல்களில் மகாராஷ்டிர மாநிலத்தில் 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் நோட்டாவுக்கு கிடைத்துள்ள 7,42,134 ஓட்டுகள் தான் அதிகபட்ச ஓட்டுகள் என்றும், மிசோரமில் கடந்த 2018-ம் ஆண்டு நடந்த தேர்தலில் கிடைத்துள்ள 2,917 ஓட்டுகள் தான் குறைந்தபட்ச ஓட்டுகள் என்றும் தெரிவித்துள்ளது. 

இதனை போன்றே மாநில பாராளுமன்ற தேர்தலில் நோட்டாவுக்கு பீகாரின் கோபால்கஞ்ச் தொகுதியில் கிடைத்த 51,660 ஓட்டுகள்தான் அதிகபட்ச ஓட்டுகள் என்றும், லட்சத்தீவு தொகுதியில் கிடைத்த 100 ஓட்டுகள்தான் குறைந்தபட்ச ஓட்டுகள் என்றும் தெரிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

last 5 years nota vote count


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->