சமத்துவ இந்தியாவை கண்டே தீருவோம்! ஜெய் பீம்! - முதலமைச்சர் மு.க ஸ்டாலின்
Let see an equal India Jai Bhim Chief Minister MK Stalin
சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 135-வது பிறந்தநாளான இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அரசியல் தலைவர்கள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து தங்களது மரியாதையை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார்.அதில்,"சாதி எனும் ஆயிரமாண்டு அழுக்கினை அறிவெனும் தீப்பந்தம் கொண்டு பொசுக்கிய புரட்சியாளர் - தனக்குவமை இல்லாத புத்துலகப் புத்தர் சட்ட மாமேதை அம்பேத்கர் பிறந்தநாள்...சமத்துவ நாள்!
ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் நம் பயணத்தில் என்றும் நம்மை வழிநடத்தும் அறிவுலகச் சூரியன் அம்பேத்கர் வாழ்க!
'எல்லார்க்கும் எல்லாம்' என்ற இலக்கை நோக்கிய நமது திராவிட மாடல் பயணத்தில், பாபாசாகேப் விரும்பிய சமத்துவ இந்தியா கண்டே தீருவோம்! ஜெய்பீம்! " எனத் தெரிவித்துள்ளார்.
இது தற்போது பரவி வருகிறது.
English Summary
Let see an equal India Jai Bhim Chief Minister MK Stalin