ஒரே நாளில் மதுக்கடைகள் க்ளோஸ்!...விசிக திருமாவளவனின் அனுமானம் நிறைவேறுமா? - Seithipunal
Seithipunal


விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், அனைத்துக் கட்சிகளும் மது வேண்டாம், போதைப் பொருள் வேண்டாம், மது விலக்கு தேவை என்னும் கருத்தில் உடன்படுகின்றன. ஆனால், இந்தியா முழுவதும் மதுக்கடைகள் திறந்து இருக்கின்றன, மது ஆலைகள் இயங்குகின்றன.

இந்த நிலையில், எல்லா கட்சிகளும் மதுவிலக்கு தேவை என்னும் கருத்தில் உடன்படுகிறபோது இன்னும் ஏன் மதுக்கடைகள் திறந்து இருக்கின்றன என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், அனைவரும் சேர்ந்து ஒருமித்த முடிவு எடுக்கிற போது ஒரே நாளில் மதுக்கடைகளை மூடிவிட முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மது-போதை பொருட்கள் ஒழிப்பு மாநாடு கள்ளக்குறிச்சியில் அடுத்த மாதம் 2-ம் தேதி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Liquor shops close in one day vck thirumavalavan assumption will come true


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->