குஜராத் தேர்தல் முடிவுகள் நாடெங்கும் எதிரொலிக்கும் - மத்திய அமைச்சர் எல்.முருகன் பேட்டி!! - Seithipunal
Seithipunal


குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தலில் 150-க்கும் மேற்பட்ட தொகுதிகளை வென்று பாஜக மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது. குஜராத்தில் தொடர்ச்சியாக ஏழாவது முறை பாஜக ஆட்சி அமைக்கிறது. இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் எம்.முருகன் "பாஜக ஒரு வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்றுள்ளது.

குஜராத் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிக இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. பிரதமர் மோடி மீது குஜராத் மக்கள் வைத்துள்ள மிகப்பெரிய நம்பிக்கையும், பாஜக ஆட்சியில் குஜராத் மாநிலம் அடைந்துள்ள வளர்ச்சியையும் இந்த வெற்றி எடுத்துக்காட்டுகிறது. இமாச்சல பிரதேசத்தை பொருத்தவரை ஒரு சதவீதத்திற்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் பாஜக வெற்றி வாய்ப்பை இழந்துள்ளது.

பாஜகவை வீழ்த்துவதற்காக ஆம் ஆத்மி நிகழ்த்திய அரசியல் நாடகம் இந்த தேர்தலில் எடுபடவில்லை. இமாச்சலப் பிரதேசத்தில் ஆம் ஆத்மி போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழந்துள்ளது. குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக பெற்றுள்ள வரலாற்று சிறப்புமிக்க வெற்றி வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் நாடு எங்கிலும் எதிரொலிக்கும்" என செய்தியாளர்கள் சந்திப்பில் பேசி உள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Lmurugan said Gujarat results will reverberate across country


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->