மக்களவை தேர்தல் :ஸ்டார் வேட்பாளர்களின் முன்னணி நிலவரம்! - Seithipunal
Seithipunal


இன்று 18வது லோக் சபா தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடந்து வரும் நிலையில், முக்கிய ஸ்டார் வேட்பாளர்களின் முன்னணி நிலவரம் குறித்து இங்கு காண்போம். உத்திரபிரதேசத்தில் வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடி, 28719 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார். 

காங்கிரஸ் வேட்பாளர் ராகுல் காந்தி உத்திரபிரதேசத்தில் ரேபரேலி தொகுதியில் 28799 வாக்குகளுடனும், கேரளாவின் வயநாடு தொகுதியில் 53327 வாக்குகளுடனும் முன்னிலையில் உள்ளார். மத்திய உள்துறை அமைசர் அமித்ஷா, குஜராத்தின் காந்தி நகர் தொகுதியில் 95521 வாக்குகளுடனும், சமாஜ்வாடி கட்சியின் அகிலேஷ் யாதவ் உத்திரபிரதேசத்தில் கன்னூஜ் தொகுதியில் 24164 வாக்குகளுடனும்முன்னிலையில் உள்ளனர்.

திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளரான கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் மேற்கு வங்கத்தில் பின்னடைவை சந்தித்துள்ளார். மேலும் ஏஐஎம்ஐஎம் வேட்பாளரான அசாதுதீன் ஓவைசி தெலங்கானாவின் ஹைதராபாத் தொகுதியில் முன்னிலையில் உள்ளார். மீரட் தொகுதி பாஜக வேட்பாளரான அருண் கோவில் பின்னடைவை சந்தித்துள்ளார். மேலும் காங்கிரசின் சசி தரூர் கேரளாவின் திருவனந்தபுரத்தில் 28605 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார். 

அமேதி பாஜக வேட்பாளர் ஸ்மிரிதி இரானி 16869 வாக்குகளுடன் பின்னடைவை சந்தித்துள்ளார். லக்னோ தொகுதியில் பாஜகவின் ராஜ்நாத்சிங், நாக்பூர் தொகுதியில் நிதின் கட்கரி, ஹிமாச்சலில் நடிகை கங்கணா, வடக்கு மும்பையில் பியூஸ் கோயல், மதுராவில் ஹேமமாலினி, தெற்கு பெங்களூரில் தேஜஸ்வி சூர்யா ஆகிய பாஜக வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Lok Sabha Election Star Candidates Leading position


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->