லோக் சபா தேர்தல் வாக்கு எண்ணிக்கை : சேலத்தில் யார் முன்னிலை? - Seithipunal
Seithipunal


கடந்த ஏப்ரல் 19ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை நடைபெற்ற லோக் சபா தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நாடு முழுவதும் நடைபெறுகிறது. பாஜக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் சில கட்சிகளும், காங்கிரஸ் தலைமையில் இந்தியா கூட்டணியில் சில கட்சிகளும் நேரடியாக மோதுகின்றன.

தமிழ்நாட்டில் 39 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. தமிழ்நாட்டின் ஆளும் கட்சியான திமுக இந்தியா கூட்டணியில் உள்ளது.  இந்நிலையில் தமிழ்நாட்டின் 15வது தொகுதியாக சேலம் உள்ளது. இங்கு கடந்த ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக லோக் சபா தேர்தல் நடந்தது.

இங்கு 1951ம் ஆண்டு முதல் லோக் சபா தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. சேலம் தொகுதியில் பெரும்பாலும் திராவிடக் காட்சிகளே ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்நிலையில் தற்போது இங்கு திமுக சார்பில் செல்வ கணபதியும், அதிமுக சார்பில் விக்னேஷ், பாமக சார்பில் அண்ணாதுரை, நாம் தமிழர் கட்சி சார்பில் மனோஜ் குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

மேலும் சேலத்தில் 78.16 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில், கடந்த ஆண்டுகளில் தமிழகத்தை ஆளும் இரு திராவிட கட்சிகளே மாற்றி மாற்றி வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது வாக்கு எண்ணிக்கையில் அதிமுக முன்னிலையில் உள்ளதாக தெரிய வந்துள்ளது. 

இம்முறை எந்த கட்சி ஜெயிக்கும் என்று சேலம் மக்கள் மிகுந்த ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். இன்று மாலை 6 மணிக்குள் வெற்றி பெறப்போவது யார் என்று தெரிய வந்து விடும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Lok Sabha Election Who is Leading in Salem


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->