தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 37 இடங்களில் முன்னிலை! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் 18வது மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை நடைபெற்றது. மேலும் தமிழகத்தின் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் உட்பட மேலும் 4 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலும் நடைபெற்று முடிந்துள்ளது.

இந்நிலையில் அனைத்து தொகுதிகளிலும் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் தமிழ்நாட்டில் மொத்தம் 39 மக்களவைத் தொகுதிகள் உள்ளன.இவற்றுக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடந்தது. திமுக, அதிமுக, பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சிகளுக்குள் தமிழ்நாட்டில் போட்டி நிலவுகிறது. 

மத்தியில் திமுக காங்கிரஸ் தலைமையில் அமைந்துள்ள இந்தியா கூட்டணியில் உள்ளது. தமிழ்நாட்டில் திமுக தலைமையில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மற்றும் இந்திய முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் உள்ளன.

இதில் திமுக 21 இடங்களிலும், காங்கிரஸ் 10 இடங்களிலும், விசிக 2, மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா 2 இடங்களிலும், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகள் தலா 1 இடங்களிலும் போட்டியிடுகின்றன. 

இந்நிலையில் இன்றைய வாக்கு எண்ணிக்கையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பின் படி திமுக கூட்டணி முன்னிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

LokSabha Election DMK Alliance Lead in Tamilnadu


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->