தேமுதிக கனவில் மண்! வேற வழியே இல்லை! வெளியான அதிர்ச்சி தகவல்! - Seithipunal
Seithipunal


நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையில் போட்டியிட்ட இண்டி கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

இதில், விருதுநகர் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பாக தேமுதிக கட்சி சார்பில் மறைந்த நடிகர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் போட்டியிட்டார். 

அத்தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் மாணிக்கம் தாகூரை எதிர்த்து போட்டியிட்ட விஜய பிரபாகரன், 4379 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்.

இந்த தேர்தலில் தோல்வியடைந்தது குறித்து பேசிய பிரேமலதா, வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்துள்ளது என்றும், விருதுநகரில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட வேண்டும் என்றும் குற்றம் சாட்டினார்.

மேலும், டெல்லி சென்ற விஜய பிரபாகரன், தலைமை தேர்தல் ஆணையரை நேரில் சந்தித்து, விருதுநகர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கையின் போது முறைகேடு நடந்துள்ளது. மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று மனு அளித்துள்ளார்.

இந்நிலையில், விருதுநகர் மக்களவை தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வாய்ப்பில்லை என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்க்கு முக்கிய காரணம் தேர்தல் முடிவுகள் குடியரசு தலைவரிடம் தாக்கல் செய்யப்பட்டுவிட்டதால் தேர்தல் ஆவணங்களை மீண்டும் எடுக்க முடியாது என்பதால்,  தேர்தல் ஆணையம் விரும்பினாலும் மறுவாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட முடியாது என்ற நிலை உள்ளதாம்.

தற்போது இருக்கும் ஒரேவழி தோல்வியடைந்த வேட்பாளர் விஜய பிரபாகரன் நீதிமன்றம் மூலம் மட்டுமே தீர்வு காண முடியும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

LokSabha Elections 2024 Virudhunagar DMDK Vijaya Prabakaran


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->