அடுத்த விக்கெட் : ராகுல்காந்தி மீது கடும் குற்றச்சாட்டு - எம்.ஏ. கான் விலகல்.!
M A KHAN RESIGN CONGRESS
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக, எம்.ஏ. கான் அக்கட்சியின் தலைமைக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அவர் எழுதிய அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது, "கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் கட்சியை வலுப்படுத்துவதற்கு தயாராக இல்லை. இதனால் மூத்த தலைவர்கள் கட்சியில் இருந்து விலகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
கட்சி நடவடிக்கைகளில் பங்கேற்பதை நிறுத்திக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லாததால், மாணவப் பருவத்தில் இருந்தே கட்சியில் இருந்த நான், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்துப் பதவிகளில் இருந்தும் விலகுகிறேன்.
காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டதில் இருந்து அவர் தன்னிச்சையாக செயல்படத் தொடங்கிவிட்டார். மூத்த தலைவர்களுடன் ராகுல் காந்திக்கு பழகத் தெரியவில்லை.
இதில், கட்சியின் தொண்டர் முதல் உயர்மட்டக் குழுவினர் வரை யாருக்கும் உடன்பாடு இல்லை. தனது பழைய பெருமையை மீட்டெடுத்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் என்ற நம்பிக்கையை பொதுமக்களுக்கு அளிக்க காங்கிரஸ் தவறிவிட்டது". என்று எம்.ஏ. கான் தெரிவித்துள்ளார்.