சனாதன விவகாரம் || திமுக அமைச்சர்கள் மீதான நடவடிக்கை எடுக்காது ஏன்? காவல்துறையை ரவுண்டு கட்டிய நீதிமன்றம்.!! - Seithipunal
Seithipunal


சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் சனாதான தர்மத்தை வேரோடு ஒழிக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பிய இருந்தது. இது தொடர்பாக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ஆகியோருக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் கோவாரண்டோ வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் திராவிட கொள்கைகளுக்கு எதிராக கூட்டம் நடத்துவதற்கு அனுமதி கேட்டு திருவேற்காட்டைச் சேர்ந்த மகேஷ் கார்த்திகேயன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். 

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர்கள் கலந்து கொண்டு பேசியதின் விளைவாக தான் திராவிட கொள்கை எதிராக கூட்டம் நடத்த அனுமதி கேட்டு வழக்கு தொடர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

பிளவு ஏற்படுத்தக்கூடிய எந்த ஒரு கூட்டத்திற்கும் அனுமதி வழங்க முடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்ட அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காதது ஏன்? காவல்துறை தனது கடமையை செய்யாமல் தவறிவிட்டது.

எந்தக் கொள்கைக்கும் எதிராக பேசுவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்காது. அதிகாரத்தில் உள்ளவர்கள் பொது நிகழ்ச்சிகளில் பேசும்போது சாதி, மதம், கொள்கை ரீதியாக பிளவு ஏற்படுத்தவாறு கவனத்துடன் பேச வேண்டும். குறிப்பிட்ட கொள்கையை ஒழிக்க வேண்டும் என பேசுவதற்கு பதிலாக மது, போதை பொருட்கள், ஊழலை ஒழிப்பதில் அமைச்சர்கள் கவனம் செலுத்தலாம் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MadrasHC dissatisfied police not taking action against DMK ministers


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->