#BREAKING || திமுக அமைச்சர்கள் வழக்கு.!! தீர்ப்பால் 3 நாட்களாக தூங்கவில்லை.!! நீதிபதி வேதனை!!
MadrasHC judge not sleep after reading DMK ministers acquitted judgment
கடந்த 2006 முதல் 2011ம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக திமுக அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ் ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மற்றும் அவர்களின் குடும்பத்தினரை சொத்து குவிப்பு வழக்கிலிருந்து விருதுநகர் மாவட்ட சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்ததை அடுத்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து மறு விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அறிவித்ததோடு இன்று நடைபெறும் வழக்குகளின் விசாரணை பட்டியலில் அமைச்சர்கள் மீதான வழக்குகள் சேர்க்கப்பட்டது.
அதன்படி இன்று திமுக அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு மீதான வழக்கின் விசாரணை தொடங்கியதும் அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் தாமாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு முன்பாக உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை முன்வைக்கிறோம். அதனை நீதிபதி கேட்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
அதனை ஏற்க மறுத்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் "இந்த வழக்கில் நோட்டீஸ் பிறப்பிக்கிறோம். அதற்கு முதலில் பதில் சொல்லுங்கள் பிறகு உங்களின் வாதங்களை முன்வையுங்கள்" என திட்டவட்டமாக தெரிவித்ததோடு அமைச்சர்கள் விடுதலை செய்யப்பட்டதில் ஒரே மாதிரியான நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளது.
அமைச்சர்கள் விடுதலை செய்யப்பட்ட தீர்ப்பை படித்ததில் இருந்து 3 நாட்களாக தூக்கம் இல்லை. எனது மனதை உறுத்தியது. இதனைக் கண்டு காணாமல் விட்டுவிட்டால், எனது கடமையை செய்ய தவறிவிட்டேன் என தோன்றும்.
அதன் அடிப்படையில் இரண்டு அமைச்சர்கள் விடுதலை செய்ததாக அறிவிக்கப்பட்ட தீர்ப்பை தாமாகவும் முன்வந்து மறுவிசாரணை செய்ய உள்ளதாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். நீதிமன்றம் என்பது குறிப்பிட்ட கட்சியினருக்கோ, குறிப்பிட்ட கட்சியை சார்ந்தவர்களுக்கோ, அரசு தரப்புக்கு உரித்தானது இல்லை.
சாதாரண ஏழை எளிய மக்களான குப்பனுக்கும் சுப்பனுக்கும், சொந்தமான நீதிமன்றம். அவர்களுக்கு உறித்தான நியாயமான தீர்ப்புகளை வழங்க வேண்டிய கடமை இருக்கிறது.
அமைச்சர்கள் மீதான வழக்கில் ஒரே மாதிரியான நடைமுறைகளை பின்பற்றி தேதி மட்டுமே மாற்றி எழுதப்பட்டுள்ளது. இதனை எவ்வாறு ஏற்றுக் கொள்வது. லஞ்ச ஒழிப்புத்துறை இந்த வழக்கில் அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்த நிலையில் 2021க்கு பிறகு தங்களின் நிலைப்பாட்டை மாற்றியுள்ளது.
இதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. ஆட்சியாளர்களுக்கு ஏற்றார் போல் அரசு அதிகாரிகளும் தங்களை மாற்றிக் கொள்கின்றனர் என தனது அதிருப்தியை வெளிப்படுத்திய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இந்த வழக்கில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை, திமுக அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மற்றும் அவருடைய குடும்பத்தினர் பதிலளிக்குமாறு உத்தரவிட்டதோடு இந்த வழக்கின் விசாரணையை செப்டம்பர் 20ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.
English Summary
MadrasHC judge not sleep after reading DMK ministers acquitted judgment