அரசு நிலத்தை ஆட்டைய போட்ட திமுக எம்பி.,க்கு அக்.15 வரை கெடு! சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
MadrasHC order DMK MP Kalanithi vacates govet land before Oct15
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபட்டது. இந்த நிலையில் கடந்த 2017ம் ஆண்டு சென்னை வடக்கு தொகுதி திமுக நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் மகனுமான கலாநிதி சென்னை கோயம்பேட்டில் உள்ள அவருக்கு சொந்தமான மருத்துவமனையின் நிலத்தை கையகப்படுத்துவதற்கு எதிராக தாக்கல் செய்த 2 ரிட் மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியம் உத்தரவிட்டு உள்ளார்.
இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று முடிந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த தீர்ப்பில் "உண்மையில் இந்த நிலம் மாநில அரசுக்கு சொந்தமானது. கடந்த 1995 ஆம் ஆண்டு அவரும் அவரது குடும்பத்தினரும் இந்தச் சொத்தை விற்பனையாளர்களிடமிருந்து வாங்கியதாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த நிலம் கிராம நத்தம் (பொதுவான கிராம நிலம்) என வருவாய்ப் பதிவேடுகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. அதன் மீது மனுதாரரான கலாநிதி அரசு உரிமை கோர முடியாது. விற்பனையாளர்கள் சொத்தின் மீது எவ்வாறு உரிமையைப் பெற்றனர் என்பதை நிரூபிக்க கோப்பில் எந்த ஆதாரங்களும் இல்லை.
மேலும், கிராம நத்தம் என்பது பொதுவான கிராம நிலங்களுக்குப் பயன்படுத்தப்படும் வகைப்பாடு ஆகும். அந்த சொத்துக்கள் பொதுவான பயன்பாட்டிற்குத் தேவையில்லை என்றால், நிலமற்ற ஏழைகளுக்கு குடியிருப்பு நோக்கத்திற்காக மட்டும் ஒதுக்கப்படலாம்.
மேலும் அரசுப் பொறம்போக்கு என மறுவகைப்படுத்தப்பட்டு, கிராம நத்தம் என நிலம் வகைப்படுத்தப்படுவதில் சென்னை நகரத்தை ஒரு கிராமமாகக் கருத முடியாததால் வருவாய் பதிவேட்டில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டன. மேலும் அரசு நிலங்களை தனிநபர்களுக்கு வழங்குவதற்கு எதிராக 1962 ஆம் ஆண்டிலேயே தடை விதிக்கப்பட்டுள்ளது என நீதிபதி எனது தீர்ப்பில் சுட்டிக்காட்டி உள்ளார்.
அதன் அடிப்படையில் சென்னை கோயம்பேட்டில் தனியார் மருத்துவமனை கட்டியுள்ள அரசு நிலத்தை ஒரு மாத காலத்திற்குள் காலி செய்ய வேண்டும். இல்லையெனில் வெளியேற்றப்படுவீர்கள் என ஆற்காடு வீராசாமியின் மகனும் திமுக எம்பியுமான டாக்டர் வி.கலாநிதிக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் உத்தரவிட்டு வழக்கினை முடித்து வைத்துள்ளார்.
English Summary
MadrasHC order DMK MP Kalanithi vacates govet land before Oct15