திமுகவுக்கு அடுத்த தலைவலி.! 2 அமைச்சர்கள் விடுதலையான வழக்கில் நாளை முதல் மறு விசாரணை.!! உயர் நீதிமன்றம் அதிரடி.!! - Seithipunal
Seithipunal


திமுக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் ஆகியோரை சொத்து குவிப்பு வழக்கிலிருந்து கிழமை நீதிமன்றங்கள் அண்மையில் விடுவித்து இருந்தது. இதற்கிடையே தங்கம் தென்னரசு மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து மீண்டும் விசாரணைக்கு எடுத்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வின் முன்னிலையில் நாளை அமைச்சர் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மீதான சொத்து குவிப்பு வழக்கின் மறுவிசாரணை நடைபெற உள்ளது. 

ஏற்கனவே வேலூர் மாவட்ட நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட திமுக அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக் குவிப்பு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தால் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் தற்பொழுது மேலும் 2 திமுக அமைச்சர்கள் மீதான வழக்கை தாமாக முன்வந்து சென்னை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MadrasHC retrial in property reference case against DMK ministers


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->