ராஜேந்திர பாலாஜியின் வழக்கில் ஆஜராகியதற்காக வழக்கறிஞர் வீட்டில் சோதனை செய்வதெல்லாம் ஓவர் - நீதிபதி கண்டிப்பு.! - Seithipunal
Seithipunal


அதிமுக ஆட்சியில் பால்வளத் துறை அமைச்சராக இருந்த கே.டி.ராஜேந்திரபாலாஜி, ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் பெற்றுக்கொண்டு பணியும் வழங்காமல், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியதாக தாகரவீந்திரன் மற்றும் விஜய் நல்லதம்பி ஆகியோர் குற்றஞ்சாட்டினர்.

இதுகுறித்த புகாரின் பேரில் ராஜேந்திர பாலாஜி மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. ராஜேந்திர பாலாஜியுடன் இருந்த என்.பாபுராய், வி.எஸ்.பலராமன், எஸ்.கே.முத்துப்பாண்டியன் ஆகியோர் மீதும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கிடைக்காததால் தலைமறைவாக உள்ள ராஜேந்திர பாலாஜியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. காவல்துறையால் தேடப்பட்டு வரும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி டெல்லி, பெங்களூரில் பதுங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

இந்நிலையில், ஜாமின் மனு மீதான உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வழக்கு குறித்து முடிவெடுப்பார் என்று, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் ராஜேந்திர பாலாஜியின் வழக்கறிஞர் தகவல் தெரிவித்துள்ளார். 

அப்போது உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்கள், "முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் வழக்குகளில் ஆஜரானார் என்பதற்காக  வழக்கறிஞர் மாரீஸ்குமாரின் வீட்டில் சோதனை செய்தது ஏற்கத்தக்கதல்ல" என்று கருத்து தெரித்துள்ளார்.

இதற்கிடையே, தனக்கு ஜாமீன் வழங்கவேண்டும் என்று, உச்சநீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி தொடர்ந்த வழக்கு வருகிற 11-ஆம் தேதி விசாரணைக்கு வர வாய்ப்புள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai High Court judge say about rajendra balaji case issue


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->