மதுரை ஜல்லிக்கட்டு போராட்டம் || 23 பேரை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவு.! - Seithipunal
Seithipunal


மதுரையில், அலங்காநல்லூர் மற்றும் தமுக்கம் மைதானம் போன்ற பல்வேறு இடங்களில் கடந்த 2017-ஆம் ஆண்டு மத்திய, மாநில அரசுகளிடம் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வேண்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போதுஉ, மதுரையை நோக்கி வந்த ரயிலை மறித்து தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். அப்போது வாகனங்களை உடைத்து, கலவரத்தில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.

தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கலவரத்தில் ஈடுபட்ட 23 நபர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். 

இது குறித்து மதுரை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. 

கடந்த 5 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில், இன்றும் இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது, அப்போது, இந்த வழக்கில் தொடர்புடைய 23 நபரையும் விடுதலை செய்ய நீதிபதி நாகலட்சுமி உத்தரவு பிறப்பித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

madurai jallikattu protest issue court order


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->