சாதிவாரி கணக்கெடுப்பு, இளைஞர்களுக்கு ரூ.4,000, மகளிருக்கு ரூ.3,000 - இண்டி கூட்டணியின் தேர்தல் அறிக்கை! - Seithipunal
Seithipunal


வரும் நவம்பர் 20 ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலத்திற்கு ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. 

இந்நிலையில், காங்கிரஸ் தலைமையிலான ‘மகா விகாஸ் அஃகாடி’ கூட்டணியின் ‘மகாராஷ்டிரா நாமா’ என்ற தேர்தல் அறிக்கை இன்று வெளியாகியுள்ளது.

முக்கிய வாக்குறுதிகளாக, மகளிருக்கு ரூ.3,000 மாதாந்திர ஊக்கத் தொகை மற்றும் அரசுப் பேருந்துகளில் இலவச பயணம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தேர்தல் அறிக்கையில் உள்ள சில முக்கிய வாக்குறுதிகள்:

- விவசாயிகளுக்கு கடனைச் சரியாகத் திருப்பிச் செலுத்துவோருக்கு ரூ.50,000 உதவித் தொகை
- சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, 50% இடஒதுக்கீட்டுத் திட்டத்தில் மாற்றம்
- வேலை தேடும் இளைஞர்களுக்கு மாதாந்திரமாக ரூ.4,000 உதவித் தொகை
- ரூ.25 லட்சத்திற்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்

288 தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிர மாநிலத்தில் எதிர்க்கட்சிகளான காங்கிரஸ்-சிவசேனா (உத்தவ் தாக்கரே), தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) ஆகியவை இணைந்த ‘மகா விகாஸ் அஃகாடி’ கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.

ஆளும் பாஜக-சிவசேனா (முதல்வர் ஏக்நாத் ஷிண்டே), துணை முதல்வர் அஜீத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஆகியவை அடங்கிய ‘மகாயுதி’ கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Maharastra INDI Alliance Manifesto


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->