காங்கிரசுடம் கூட்டணி வேண்டாம்! தனித்துப் போட்டி - போர்க்கொடி தூக்கும் கூட்டணி கட்சி எம்எல்ஏ-க்கள்!
Maharastra INDI Alliance may be break
மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற பொதுத்தேர்தலில், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி படுதோல்வியை சந்தித்துள்ளது. மொத்தம் 288 தொகுதிகளில் இக்கூட்டணிக்கு வெறும் 58 இடங்கள்தான் கிடைத்தன.
இந்த தோல்வி காங்கிரஸ், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளுக்கும் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது இந்த கூட்டணி உடையும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
சிவசேனா கட்சியில் தோல்வியை இன்னும் ஏற்றுக்கொள்ள முடியாத நிலை உள்ளது. தோல்விக்குக் காரணமாக காங்கிரஸின் தவறான முடிவுகளே இருந்ததாக சிவசேனாவின் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் கூறுகிறார்கள். இதனால், காங்கிரசுடன் கூட்டணியை தொடர வேண்டாம் என்று சிவசேனாவின் பல முக்கிய நிர்வாகிகள், எம்எல்ஏ-க்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும், அம்மாநிலத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சிவசேனாவின் முக்கிய தலைவர்களும், எம்.எல்.ஏ.க்களும் காங்கிரசுடன் சேர்ந்து தேர்தல் சந்திக்க வேண்டாம் என்ற கருத்தைத் தெரிவித்துள்ளனர்.
இதனால் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா தனித்துப் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இது குறித்து சிவசேனாவின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத், "தோல்வி நிச்சயமாக எங்களுக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் காங்கிரசுடன் கூட்டணியை உடைக்கும் திட்டம் எங்களிடம் இல்லை. இருப்பினும், உள்ளாட்சி தேர்தலுக்கான திட்டங்களை சரியாக ஆய்வு செய்து முடிவெடுக்கப்படும்," என கூறியுள்ளார்.
English Summary
Maharastra INDI Alliance may be break