"என்னை கூப்பிடல.. நான் போகல.." பட்டென்று கூறிய மம்தா!!
Mamtha Banerjee Says About PM Modi Swearing in Ceremony
பாராளுமன்றத் தேர்தல் முடிவுக்கு பிறகு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கிறது. பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளார். இந்த பதவியேற்பு விழா நிகழ்வு ஜூன் 9ம் தேதியான நாளை நடைபெற உள்ளது.
நாளை டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு முன்னிலையில் பிரதமர் மோடி பதவியேற்க உள்ளார். இந்நிலையில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது, " அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற தலைவராக நான் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளேன். மேலும் எம். பி. சுதீப் பந்தோபாத்யாய் திரிணாமுல் காங்கிரசின் மக்களவைத் தலைவராகவும், டாக்டர் ககோலி கோஷ் தஸ்திதர் மக்களவையின் துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்" என்று கூறினார்.
இதையடுத்து செய்தியாளர்கள் பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் மம்தா கலந்து கொள்ள இருக்கிறாரா? என்று கேட்ட கேள்விக்கு, "எனக்கு அழைப்பு வரவில்லை. முறையான அழைப்பு வராமல் நான் கலந்து கொள்ள மாட்டேன்" என்று மம்தா பானர்ஜி கூறினார்.
மேற்கு வங்க முதலமைச்சராக உள்ள மம்தா பானர்ஜி காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
Mamtha Banerjee Says About PM Modi Swearing in Ceremony