சனாதன விவகாரம் || எங்கள் மாநிலத்திற்குள் உதயநிதி நுழைய முடியாது! பாஜக அமைச்சர் எச்சரிக்கை! - Seithipunal
Seithipunal


சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்ற சாதான ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. கொடிய நோய்களைப் போல சனாதான தர்மமும் ஒழிக்க வேண்டும் என உதயநிதி பேசியதற்கு பாஜக தரப்பிலிருந்து கடும் கண்டனம் எழுந்துள்ளது.

தேசிய பாஜக தலைமை சனாதன தர்மம் குறித்து கருத்து தெரிவித்துள்ள உதயநிதி ஸ்டாலின் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். உதயநிதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளது

இந்த நிலையில் சனாதான தர்மம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் கருத்துக்கு மகாராஷ்டிரா மாநில பாஜக அமைச்சர் மங்கள் பிரசாத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் "உதயநிதி ஸ்டாலின் தனது கருத்தை திரும்ப பெறாவிட்டால் அவரை மகாராஷ்டிரா மாநிலத்திற்குள் அனுமதிக்க மாட்டோம். கோடிக்கணக்கான இந்துக்கள் மனதை உதயநிதி ஸ்டாலின் புண்படுத்தி விட்டார். இந்துக்கள் தங்கள் சுயமரியாதையை விட்டுக் கொடுக்கும் அளவுக்கு பலவீனமானவர்கள் அல்ல" எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதேபோன்று மத்திய அமைச்சர் மீனாட்சி லேகி தனது அறிக்கையில் "சனாதனத்திற்கு எதிராக உறுதியாக இருந்து அரசியல் செய்கிறார்கள். இவர்கள் மனதில் சனாதனத்தின் மீது வெறுப்பு. இந்து சமுதாயம் வெறுப்புணர்வை காட்டுவது இது முதல் முறையாக நடப்பது அல்ல. ஆனால் இன்று மக்கள் சனாதன எதிர்ப்பை ஏற்கவில்லை.

இந்த மாதிரியான மன நிலைையை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. சனாதன மரபுகளை அவமரியாதை செய்பவர்களை மக்கள் வாழ்க்கை மரபுகள் பற்றி அறியாதவர்கள் என நினைப்பார்கள்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mangalprabhat warned Udayanidhi cannot enter Maharashtra


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->