சின்னப் பையன்னா .. ஜெயிக்க வெக்கணுமா? பிரேமலதாவிற்கு பதிலடி கொடுத்த மாணிக்கம் தாகூர்! - Seithipunal
Seithipunal


பாராளுமன்றத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டு வென்றுள்ளார் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர். இந்நிலையில் இவரை எதிர்த்து போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் கேப்டன் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரனின் தோல்வி குறித்து வாக்கு எண்ணிக்கைக்கு மறுநாள் பேசிய பிரேமலதா , விருதுநகரில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

மேலும் அவர் அப்போது " நீங்க 50, 60 வருஷமா கட்சி நடத்துறீங்க. ஒரு சின்ன பையன் முதல் தடவையா தேர்தல்ல நிக்கிறாரு. அவரை பெரிய மனசு பண்ணி ஜெயிக்க வெச்சா தான் என்ன? " என்று பேசியிருந்தார். மேலும் தேர்தல் ஆணையத்திடமும் இது குறித்து புகாரளித்திருந்தார் பிரேமலதா. இந்நிலையில் இது குறித்து விருதுநகர் எம். பி. மாணிக்கம் தாகூர் பேட்டியளித்துள்ளார்.

அதில் அவர், "வாக்கு எண்ணப்பட்ட நாளன்று தோல்வியை ஒப்புக்கொண்டு கிளம்பிய பிரேமலதா, மறுநாளே சின்ன பையனை ஜெயிக்க வெச்சா என்ன? என்று கேட்கிறார். இது பாராளுமன்றத் தேர்தல். இப்படி இவர் எப்போதும் பொறுப்பில்லாமல் முன்னுக்குப் பின் முரணாக பேசிக்கொண்டு இருக்கிறார்.

சின்ன பையனாக இருந்தால் ஜெயிக்க வைக்க வேண்டுமா? இது என்ன சினிமா படமா? அவர் வேண்டுமானால் சட்டரீதியான போராட்டத்தை முன்னெடுக்கட்டும். நாங்கள் சட்டரீதியாக இதை சந்திக்கிறோம்" என்று மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Manickam Tagore Answering to Premalatha


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->