மணிப்பூர் முதல்வரின் ராஜினாமா கடிதத்தை கிழித்தெரிந்த ஆதரவாளர்கள் போராட்டம்.!! - Seithipunal
Seithipunal


மணிப்பூர் மாநிலத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேல் நீடித்து வரும் வன்முறை சம்பவங்களை அடுத்து முதல்வர் பைரேன் சிங் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியானது. மணிப்பூர் மாநிலத்தில் தொடரும் வன்முறைக்கு பொறுப்பேற்று முதல்வர் பைரேன் சிங் ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்கட்சிகளும், பாஜக உறுப்பினர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் மணிப்பூர் ஆளுநர் அனுசியாவை இன்று பிற்பகல் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்க மணிப்பூர் முதல்வர் பைரேன் சிங் திட்டமிட்டு இருந்தார். அதன்படி இன்று பிற்பகல் ஒரு மணிக்கு ஆளுநரை சந்திக்க ராஜ் பகவானுக்கு புறப்பட்ட முதலமைச்சர் பைரேன் சிங்கை அவரது வீட்டின் முன்பு குவிந்திருந்த நூற்றுக்கணக்கான பெண் ஆதரவாளர்கள் தடுத்து நிறுத்தினர்.

மேலும் அவர் ஆளுநரிடம் வழங்க வைத்திருந்த ராஜினாமா கடிதத்தையும் கிழித்தெரிந்ததோடு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மணிப்பூர் முதல்வர் ராஜினாமா செய்யக்கூடாது. அவர் மணிப்பூர் மக்களுக்காக பல நன்மைகளை செய்துள்ளார். எங்களின் முழு ஆதரவு பைரேன் சிங்குக்கு உண்டு என தெரிவித்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Manipur CM supporters tear up resignation letter and protest


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->