#BigBreaking || சட்டமன்ற பொதுத்தேர்தல் தேதியை, சற்றுமுன் மாற்றி அறிவித்த தேர்தல் ஆணையம்.!
manipur election date 2022
மணிப்பூர் மாநில சட்டமன்ற பொதுத்தேர்தலில் தேதிகள் மாற்றப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப், மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு சட்டமன்ற பொதுத் தேர்தல் இன்று தொடங்கியுள்ளது.
இன்று உத்தர பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று நடந்து முடிந்துள்ளது. இதில் 58 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.
இந்நிலையில், மணிப்பூர் மாநில சட்டமன்ற பொதுத்தேர்தலில் தேதிகள் மாற்றப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதன்படி, பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறவிருந்த முதல் கட்ட தேர்தல், பிப்ரவரி இருபத்தி எட்டாம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மேலும், மார்ச் 3ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த இரண்டாம் கட்ட தேர்தல் மார்ச் 5ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
English Summary
manipur election date 2022